நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஆயிரத்து 841 பேர் குணமடைந்து சிகிச்சை நிலையங்களிலிருந்து வெளியேறியுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 86 ஆயிரத்து 365 ஆக அதிகரித்துள்ளது.