ஜனநாயக போராளிகள் கட்சி தேசிய மாநாடு இன்று(17) காலை யாழிலுள்ள தனியார் விடுதியொன்றில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பல முக்கிய உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
குறிப்பாக வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா. கஜதீபன் மற்றும் பிரதேச சபை தவிசாளர்களும் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் எதிர்காலத்தில் நடைபெறும் தேர்தல்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஜனநாயக போராளிகள் கட்சியும் இனைந்து போட்டியிடுவதற்கான ஆரம்ப புள்ளியாக தான் குறித்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் பங்கேற்றுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.