சீதாவக்கை ஆற்றில் மிதந்த எண்ணெய் படலம்

சீதாவக்கை ஆற்றில் எண்ணெய் படலமொன்று காணப்படுவதாக பிரதேசவாசிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

தெரணியகல நகரின் ஊடாகச் செல்லும் ஆற்றிலேயே குறித்த எண்ணெய் படலம் காணப்படுகின்றது.

எனினும் இது தொடர்பான எவ்வித தகவல்களும் தமக்கு கிடைக்கவில்லை என தெரிவித்த மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் கேகாலை மாவட்ட பிரதி பணிப்பாளர் ஆர்.எம்.எஸ்.டி ரத்னாயக்க, இந்த எண்ணெய் படலம் தொடர்பில் தெரணியகல பிரதேச செயலகத்தில் இருந்து தகவல்களைப் பெற்று விசாரணை நடத்தவுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த எண்ணெய் படலம், இம் மாதம் 3ஆம் திகதி மாலையிலிருந்து காணப்படுவதாகவும் பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Leave a Reply