ராகம மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்திருப்பது என்ன?
எங்களது மருத்துவமனையே ஒரேயொரு போதனா வைத்தியசாலை கடந்த ஒரு வருடமாக இங்கு அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது எங்கள் நான்கு வோர்ட்களை கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக ஒதுக்கியுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.எங்கள் மருத்துவமனையின் 26 முதல் 30ம் வோர்ட்களை நாங்கள் நாளாந்தம் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகளிற்காக ஒதுக்கியுள்ளோம்நாங்கள் இவர்களை மூன்று பிரிவுகளாக பிரித்து அவர்கள் அனைவரையும் துரித அன்டிஜென் பரிசோதனைக்கு உட்படுத்துகின்றோம்இதன் பின்னர் சிறிதளவு அறிகுறிகளை வெளிப்படுத்தியவர்களை வீடுகளிற்கு செல்லுமாறு கேட்டுக்கொள்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடும் அறிகுறிகளை வெளிப்படுத்துபவர்களை கந்தானை மினுவாங்கொட பகுதியில் உள்ள மருத்துவமனைகளிற்கு அனுப்பிவைக்கின்றோம்ஏனையவர்களை ஏழாம் வோர்ட்டில் அனுமதித்து கட்டில்களின் அடிப்படையில் அவர்களை அங்கு அனுப்பிவைக்கின்றோம் எனவும் மருத்துவர் தெரிவி;த்துள்ளார்.வோர்ட்கள் 26 முதல் 30 வரை கேள்வி எழுப்பியவேளை ராகம மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் லியனகே ரணசிங்க 26 வது வோர்ட்டில் 24 கட்டில்கள் மாத்திரம் காணப்படுகின்றன ஆனால் 83 கொரோனா நோயாளிகள் காணப்படுகின்றனர் 30வது வோர்ட்டில் 28 கட்டில்கள் காணப்படுகின்றன ஆனால் 57 கொரோனா நோயாளிகள் உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த நெருக்கடி காரணமாக நாங்கள் நோயாளிகளை மருத்துவமனையின் தாழ்வாரங்களில் தங்கவைக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என குறிப்பிட்டுள்ளலியனகே ரணசிங்க ் அச்சம் தரும் வகையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் எங்களால் சமாளிக்க முடியாத நிலை காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த மருத்துவமனையில் ஏனைய நோய்களினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களிற்கும் சிகிச்சை அளிக்கின்றோம் என்பதை மறக்ககூடாது நாங்கள் கொரோனா குறித்து மாத்திரம் கவனம் செலுத்த முடியாது இந்த நோயாளிகளை வேறு மருத்துவமனைகளிற்கு அனுப்ப முடியாதுஎனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் இந்த தாங்கிக்கொள்ள முடியாத நிலைமை குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளோம்நிலைமை கட்டுப்பாட்டை மீறினால் மேலும் சில வோர்ட்களை மூடிவிட்டு அதனை கொவிட் நோயாளிகளிற்கு ஒதுக்கவேண்டிய நிலைமை ஏற்படும் எனராகம மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் லியனகே ரணசிங்க.மக்கள் எங்களை விமர்சிக்கின்றார்கள் வீடியோக்களை எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிடுகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி – தினக்குரல்