நீர்கொழும்பு வைத்தியசாலையில் மாடியில் இருந்து வீழ்ந்த பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை!

நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் எட்டாவது மாடியில் இருந்து 53 வயது பெண் ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று சனிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

நீர்கொழும்பு அழுத்வத்த பிரதேசத்தை சேர்ந்த டி. செல்பி என்பவரே சம்பவத்தில் இறந்தவராவார்.இவர் கடந்த 14 ஆம் தேதி நீர்கொழும்பு வைத்தியசாலையில் வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இன்று முற்பகல் வைத்தியசாலையில் எட்டாவது மாடியிலிருந்து இவர் விழுந்து உள்ளதாக  பொலிசார் தெரிவித்தனர்.


Leave a Reply