நாடளாவிய ரீதியில் ஆரம்பமான ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை!

2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று ஞாயிற்றுக்கிழமை (18) ஆரம்பமாகியுள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சைக்கு 34,698 மாணவர்கள் தோற்றவுள்ளனர் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைக்கு முன்னர் மாணவர்களை வற்புறுத்த வேண்டாம் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்தவகையில் அராலி சரஸ்வதி மஹா வித்தியாலயத்தில் அமைந்துள்ள பரீட்சை நிலையத்திலும் பரீட்சை ஆரம்பமாகியுள்ளது. அங்கு மாணவர்கள் ஆர்வத்துடன் பரீட்சையில் கலந்துகொண்டதை அவதானிக்க முடிந்தது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (18) அம்பாறை மாவட்டத்தில் கடும் மழைக்கு மத்தியில் இடம்பெற்று வருகின்றது.

அந்த வகையில் திருகோணமலை – தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரியின் பரீட்சை நிலையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை 5 ஆம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை இடம்பெற்றது.

இதையடுத்து, தோப்பூர் கல்விக் கோட்டத்திலுள்ள றோயல் ஜுனியர்ஸ் பாடசாலை, கலைமகள் இந்துக் கல்லூரி, அல் அமான் வித்தியாலயம், அந்நூர் வித்தியாலயம், நல்லூர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, தங்கபுரம் சிறி கணேசா வித்தியாலயம், சின்னக்குளம் வித்தியாலயம், அல் ஸிபா வித்தியாலயம், ஸல்மா மகளீர் வித்தியாலயம் ,அல் ஸாகீர் வித்தியாலயம்  உள்ளிட்ட பாடசாலைகளைச் சேர்ந்த தமிழ் முஸ்லீம் மாணவர்கள் தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரி பரீட்சை நிலையத்தில் பரீட்சை எழுதுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

மலையகத்திலும் மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு செல்லக்கூடியதை எம்மால் அவதானிக்க முடிந்திருந்தது.

அந்தவகையில் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம், அட்டன் ஹைலண்ஸ் கல்லூரி ஆகிய பாடசாலைக்கு அப்பகுதி மாணவா்கள் ஆா்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு சென்றமை காணக்கூடியதாக இருந்தது. அத்தோடு பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

Leave a Reply