அமெரிக்காவின் பிரம்மாண்ட சுற்றுலா பயணிகள் கப்பல் இலங்கைக்கு!

அமெரிக்காவின் பணக்கார சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் “Ocean Odyssey” கப்பல் இன்று (18) கொழும்பு துறைமுகத்தினை வந்தடையவுள்ளது.

சுமார் 108 பணக்கார சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு இந்தியாவின் கொச்சி துறைமுகத்தில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு குறித்த கப்பல் வருகிறது.

இக்கப்பல் நாளை (19) திருகோணமலை துறைமுகத்திற்குச் செல்ல உள்ளது.

“Ocean Odyssey” கப்பலில் வந்த சுற்றுலாப் பயணிகள் கொழும்பு, குருநாகல் ஹபரணை, சீகிரிய, திருகோணமலை ஆகிய பகுதிகளுக்குச் செல்லவுள்ளனர்.

இது டிசம்பர் 21 ஆம் திகதி இரவு 7:00 மணிக்கு திருகோணமலை துறைமுகத்தில் இருந்து தாய்லாந்துக்கு புறப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply