தேசிய இனப் பிரச்சினை தீர்வும், முஸ்லிம்களின் கோரிக்கைகளும்,தொடர்பில் விஷேட கலந்துரையாடல்!

இலங்கையின், தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக தற்பொழுது பேசப்பட்டு வந்தாலும் முஸ்லிம் தரப்பில் இருந்து இது தொடர்பாக ஒரு மித்த கருத்தில் ஒரு கருத்தாடல் இடம் பெற்றவை குறைவாக உள்ளது..இது தொடர்பிலான செயலமர்வு ஒன்று இன்று (18) சூரா சபையின் ஏற்பாட்டில் கிண்ணியா ஜாவா ஜூம் ஆ பள்ளிவாயலில் இடம் பெற்றது.

இலங்கையில், கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றார்கள்..

முஸ்லிம்களின் எண்ணங்களை அபிலாசைகளை புறக்கணித்து தீர்வை நாடுவது என்பது ஒரு சமூகத்தை புறக்கணிப்பதாகும்.

இந்த, அடிப்படையில் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மட்டக்களப்பு திரிகோணமலை மாவட்டத்தை உள்ளடக்கியதாக சிவில் சமூக அமைப்பினர் ஒன்று கூடி ஒரு வரைவினை தயாரிப்பதற்கான முன்னோடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்..

இதன், அடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தின் முஸ்லிம்களின் கருத்துக்களை  பிரதிபலிக்க முகமாக ஆரம்ப வரைபினை தயாரிக்கும் பணியில் கிண்ணியா சூரா சபை ஏற்பாடுகளை செய்து வருகின்றது. இதன் அடிப்படையில், இன்று கிண்ணியாவில் செயலமர்வு இடம்பெற்றது.

Leave a Reply