மியன்மார் அகதிகளுக்கு உதவிய கடற்படை

வெற்றிலைக் கேணிக்கு வடக்கே சுமார் 3.5 கடல் மைல் தொலைவில் இலங்கைக் கடற்பரப்பில் பயணிகள் கப்பலில் இருந்த 104 மியான்மர் பிரஜைகளை இலங்கை கடற்படையினர் மீட்டு காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து வரப்பட்டனர்.

மியன்மாரில் இருந்து இந்தோனேசியாவிற்கு இவர்களை ஏற்றிச் செல்லும் போது இயந்திரக் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, நேற்றிரவு (டிசம்பர் 17) இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தது

கடல் கொந்தளிப்பான நிலையில், கடற்படையினர் கடும் முயற்சியை மேற்கொண்டு, இயக்கப்படாத படகில் இருந்து 104 மியான்மார் பிரஜைகளை மீட்டு, காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு அவர்களுக்கு கடற்படையினரால்  உணவு வழங்கப்பட்டது.

Leave a Reply