நாட்டைக் கட்டியெழுப்ப போராட வேண்டுமே தவிர நாட்டை அழிக்க அல்ல – பிரசன்ன ரணதுங்க!

போராட்டத்தினால், நாடு பின்னோக்கிச் சென்றதாகவும், நாட்டைக் கட்டி யெழுப்புவதற்காகவே போராட்டமாக இருக்க வேண்டுமே தவிர நாட்டை அழிப்பதற்காக அல்ல எனவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தினார்.

போராட்டம், என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் சதித்திட்டங்களினால் நாட்டின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மினுவாங்கொடை புதிய வர்த்தக நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில்  வருகை தந்த போராட்டக்காரர்களுடனான கலந்துரையாடலில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த வர்த்தக நிலையத்தின் திறப்பு விழா இன்று (18) மினுவாங்கொடையில் இடம்பெற்றது. நகர அபிவிருத்தி அதிகாரசபையானது 395 மில்லியன் ரூபாவை செலவழித்து இந்த புதிய மூன்று மாடி வர்த்தக நிலையத்தை நிர்மாணித்துள்ளது.

இந்த திறப்பு விழாவில் அண்மைக்கால போராட்டங்களில் கலந்து கொண்ட இளைஞர்கள் குழுவும் கலந்து கொண்டதுடன், தமது தேவை ஒன்றை  நிறைவேற்றுவதற்காக அமைச்சரை சந்தித்தனர்.

இந்த  சூழ்நிலையிலேயே அந்த உரையாடல் நடைபெற்றது.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க – தானம் செய்வதும், ஐஸ் போதைப் பொருள் குடிப்பதும் சரியல்ல.  ஐஸ் போதைப் பொருள் பாவிப்பவர்கள் தான் இந்த போராட்டத்தை நடத்தினார்கள்.  இதன் பின்னர் அந்த விஷயங்கள் நடக்க முடியாது. நீங்கள் உங்கள் வேலையைச் செய்யுங்கள்.

போராடுபவர்கள், ஐயா, நாங்கள் தவறு செய்தோம். அந்த மாதிரி வேலைக்கு இனி போக மாட்டோம்.

அமைச்சர் – சரியாக வேலை செய்யுங்கள். உங்களை வழிநடத்தியவர்கள் இருந்தால், எங்களைப் போராட்டத்திற்கு அழைத்துச் சென்றவர்கள் இவர்கள்தான் என்று அவர்களின் பெயரை காவல்துறையிடம் கொடுங்கள். இந்த விஷயங்களில் வந்து வேலை செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *