கடந்த கால ஆட்சியாளர்களின் தவறான வரிக் கொள்கையினால் தான் இந்த நாடு தற்போதைய நெருக்கடிக்குள் சிக்கியுள்ளதாக ஜக்கிய தேசிய கட்சியின் அகலவத்த பிரதேச சபையின் உப தலைவர் ரோஹன கலகொட குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்று சிறிகொத்தாவில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
தவறான வரிக் கொள்கையினால்தான் இந்த நாடு தற்போதைய நெருக்கடிக்குள் சிக்கியது.
அந்த நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டியவர் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே. ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலம் முதல் இதனை கூறி வருகிறார். இன்று நாம் வரி பற்றி பேசுகிறோம்.
இந்நாட்டில் சுமார் பத்து சதவீத மக்கள் வரி செலுத்துதலுக்கு உட்பட்டவர்கள். 90 வீதமான மக்கள் வாழ்வதற்கு 10 வீத வரியை பெற வேண்டும். பொதுவாக மற்ற நாடுகளின் நேரடி வரி விதிப்புதான் முக்கிய வரிக் கொள்கை. மறைமுக வரிவிதிப்பு என்பது மிகக் குறைந்த அளவில்தான் காணப்படுகின்றது.
வளர்ந்த பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகள் அந்தக் கொள்கையை அமல்படுத்துகின்றன.
ஒரு நாட்டில் ஜனநாயகம் என்று வரும்போது அது தேர்தல் மட்டுமல்ல, மக்களை ஒழுங்காக வாழ வைப்பது தொடர்பானதும் ஜனநாயகம் தான்.
விவசாயிகளின் நெல்லை வாங்குவதற்கு சுமார் 20 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பணத்தை தேர்தலுக்கு செலவு செய்ய சொன்னால், இது என்ன ஜனநாயகம்.- என்றார்.





