ரணிலுக்கு கால அவகாசம் இருந்தாலும், 13ஜ ஒருபோதும் அமுல்படுத்தமாட்டார் – ஹரிணி திட்டவட்டம்

13வது திருத்தம் தொடர்பான கருத்தை ரணில் விக்கிரமசிங்க முன்வைக்கும் போதே அது வெற்று வார்த்தை 

என்பதை தாம் அறிந்திருந்தாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய அமரசூரிய தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தேசியப் பிரச்சினைக்கான தீர்வாக ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 

13வது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது தேசிய பிரச்சினைக்கு தீர்வினை தருமா என்பது தொடர்பில் தமது கட்சிக்குள்ளும் விவாதங்கள் இடம்பெற்றதாக ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.

13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குறுதிகள் மற்றும் முன்முயற்சிகள் மீது தமது கட்சிக்கு நம்பிக்கை இல்லை என்றும் ஹரிணி அமரசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

ரணிலுக்கு போதுமான நேரமும் வாய்ப்புகளும் இருந்த போதும் அவரது வாக்குறுதிகள் வெற்று வார்த்தைகள் என்பது வெளிப்படையாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ரணில் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவதை முன்னெடுத்துச் செல்லமாட்டார் என்று ஹரிணி அமரசூரிய தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *