குருணாகல் மாநகர சபையை கைப்பற்றிய சஜித் தரப்பு!

குருநாகல் மாநகரசபையின் மேயர் பதவிக்கு பொருத்தமான ஒருவரை தெரிவுசெய்வதற்காக இன்று (2) நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சமகி ஜனபலவேகவை பிரதிநிதித்துவப்படுத்திய சுமேத அருணாசாந்த மேலும் 4 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.

குருநாகல் மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவர் சுமேத அருணாசாந்தவுடன் இணைந்து புதிய மேயர் தெரிவுக்காக போட்டியிட்ட விஜயானந்த வெடிசிங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்திய போதிலும் அவருக்கு 6 வாக்குகளே கிடைத்தன.

சுமேதா அருணாசாந்த 10 வாக்குகளைப் பெற்றார். சுமேத அருணாசாந்த குருநாகல் மாநகர சபைக்கு தெரிவு செய்யப்பட்ட 17வது மேயராவார். தொழில் ரீதியாக ஆங்கில ஆசிரியரான  சுமேதா அருணாசாந்த குருநாகல் லக்தாஸ் டி மெல் கல்லூரி மற்றும் வென்னப்புவ ஜோசப் வாஸ் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார்.

ஐம்பத்திரண்டு வயதான அவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.

Leave a Reply