மூன்று பேருந்துகள் மோதி விபத்து; ஒன்பது விசேட அதிரடிப் படையினருக்கு ஏற்பட்ட நிலை

மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒன்பது பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பில் நடைபெறும் சுதந்திர தின ஒத்திகையில் கலந்து கொள்வதற்காக இன்று(வியாழக்கிழமை) விசேட அதிரடிப்படையினர் சென்று கொண்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மூன்று பேரூந்துகளும் கட்டுகுருந்தவில் உள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமில் இருந்து வந்தவை எனவும், மூன்று பேருந்துகளும் பாணந்துறை நல்லூர் சந்தியில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

காயமடைந்த STF வீரர்கள் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply