உலக உணவுத் திட்டம் மூலமாக உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு!

திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட கல்மெடியாவ வடக்கு கிராம சேவகர் பிரிவில் உலக உணவுத் திட்டம் மூலமாக உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன. 

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இன்று (02)குறித்த கிராம சேவகர் பிரிவு கட்டிடத்தில் இடம் பெற்ற உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வில் உலக உணவு திட்டம் மூலமாக தெரிவு செய்யப்பட்ட 136 பயனாளிகளுக்கு இதன் போது வழங்கப்பட்டன. 

இதில் உலக உணவு திட்ட ஸ்தாபகத்தின் உத்தியோகத்தர்கள்,மற்றும் சக பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply