தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசனை!

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், கட்டுப்பாடுகளை அதிகரிப்பது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார்.

குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது.

இதில் சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத் துறை செயலாளர், தலைமைச் செயலாளர் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

இதன்போது எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் ஊரடங்கு தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை ஒகஸ்ட் மாதத்தில் ஆரம்பமாகும் என நிபுணர்கள் அறிவித்துள்ளதை தொடர்ந்து சில மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து ஆலோசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply