கொரோனா தொற்றாளர்களை வீடுகளில் வைத்து கண்காணிக்க தீர்மானம்

அறிகுறி அற்ற கொரோனா தொற்றாளர்கள் அல்லது கொரோனா தொற்றுக்குள்ளாகி அபாய நிலையை அடையாதவர்களை வீடுகளில் வைத்து மருத்துவ கண்காணிப்புகளுக்கு உட்படுத்தும் நடவடிக்கையை நாடு முழுவதும் முன்னெடுக்க தீரமானிக்கப்பட்டுள்ளது.

இதனை சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றாளர்களை வீடுகளில் வைத்து கண்காணிக்கும் நடைமுறை இதுவரையில் மேல் மாகாணத்தில் மாத்திரமே அமுல்படுத்தப்பட்டிருந்தது.

ஆனால் குறித்த நடைமுறையை எதிர்வரும் 09 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்த தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply