மட்டக்களப்பில் சமூர்த்தி வங்கியில் கடமையாற்றும் 15 பேர் உட்பட 35 பேருக்கு கொரோனா

<!–

மட்டக்களப்பில் சமூர்த்தி வங்கியில் கடமையாற்றும் 15 பேர் உட்பட 35 பேருக்கு கொரோனா – Athavan News

மட்டக்களப்பில் சமூர்த்தி வங்கியில் கடமையாற்றும் 15 பேர் உட்பட 35 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு  அரசாங்க அதிபர் காரியாலயத்தினுள்ளே இருக்கின்ற சமூர்த்தி வங்கியில் கடமையாற்றி வரும் 15 பேர் மற்றும் புளியந்தீவு பகுதியிலும் அடையாளம் காணப்பட்டவர்களின் அடிப்படையில் 35 பேருக்கு வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக  பிரதேச சுகாதார அதிகாரி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொரோனா சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளில் கட்டில்கள் இல்லாத  காரணத்தினால், தொற்று கண்டறியப்பட்டவர்களை அவர்களது வீடுகளிலேயே தனிமைபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply