ஹிஷாலினி தீக்காயங்களுக்கு உள்ளான காட்சிகள் ரிஷாட் வீட்டில் உள்ள 16 கமராவிலும் பதிவாகவில்லை – பொலிஸ்

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த 16 சிசிரீவி கமராக்கள் எவற்றிலும் ஹிஷாலினி தீக்காயங்களுக்கு உள்ளான காட்சிகள் எதுவும் பதிவாகியிருக்கவில்லை என பொலிஸ் தெரிவித்துள்ளது.

பொலிஸ் விசேட சிசிரீவி ஆய்வு பிரிவின் அதிகாரிகள் நேற்று குறித்த கமராக்களை பரிசோதித்திருந்த நிலையில், இந்த விடயம் தெரியவந்துள்ளது.

அவற்றில் இரண்டு கமராக்கள் செயலிழந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டிற்குள் பொருத்தப்பட்டிருந்த இரண்டு கமராக்களே இவ்வாறு செயலிழந்து காணப்பட்டதுடன், அதற்கான காரணம் குறித்து தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply