தற்போது கொழும்பு நகரத்தினுள் டெல்டா கொவிட் திரிபு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பரவி வருவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
இவ்விடயத்தை தனது ட்விட்டர் பதிவொன்றின் ஊடாகவே தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் கொழும்பில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 75 சதவீதத்துக்கும் அதிகமானோரின் மாதிரிகளில் அல்பா திரிபும், 19.3 சதவீதமானோரிடையே டெல்டா திரிபு கண்டறிப்பட்டடுள்ளது.

எனினும், ஜூலை 31 ஆம் திகதி ஆகும் போது, இந்த நிலைமை தலைகீழாக மாற்றமடைந்துள்ளது.
அதற்கமைய ஜூலை 31 ஆம் திகதியில் கொழும்பில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 90 சதவீதமானோர் டெல்டா திரிபினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டம் பாரதுராமானதொரு நிலையினை சந்தித்துள்ளது.
இது மிகவும் அவதானம் செலுத்த வேண்டியதொரு நிலையாகும் என தெரிவித்துள்ளார்.