இலங்கை மாணவர் ஒருவர் கனடாவில் ஏரியில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் 28 ஆம் திகதி குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.
தோம்சன் றிவர்ஸ் பல்கலைக்கழகத்தில் பயிலும் இலங்கையை சேர்ந்த அனுராத குடாகொட என்ற மாணவனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மாணவனின் இறுதி சடங்கு செலவுகளுக்காக 14 ஆயிரம் டொலர் நிதி திரட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.