ஹெரோய்ன் பாவனையால் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

தொடர்ச்சியான ஹெரோய்ன் போதைப் பாவனைக்கு அடிமையாகியிருந்த ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
கொடிகாமம், வரணி இயற்றாலையைச் சேர்ந்த வேலுப்பிள்ளை ராஜ்குமார் (வயது-37) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார். இவர் இரு பிள்ளைகளின் தந்தையாவார்.

போதைப் பொருள் குற்றச்சாட்டில் கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதி இவர் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குக் கொண்டு வரப்பட்டார். கடந்த 10ஆம் திகதி இவர் வயிற்று வலி காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பயனின்றி இவர் நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்தார் என்று மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்தன.

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.
தொடர்ச்சியான ஹெரோய்ன் பாவனையே இவரது உயிரிழப்புக்குக் காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது

The post ஹெரோய்ன் பாவனையால் குடும்பஸ்தர் உயிரிழப்பு! appeared first on உதயன் | UTHAYAN.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *