வெளிநாடு செல்வோருக்கு பைஸர்

வேலைவாய்ப்பு நிமித்தம் அல்லது கல்வி தேவைக்காக வெளிநாடு செல்வோருக்கு பைஸர் தடுப்பூசி வழங்கப்பட உள்ளதாக வடமாகாண சுகாதார பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு பைஸர் தடுப்பூசி வழங்குவது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வெளிநாட்டுக்கு கல்வி வீசா மற்றும் வேலைவாய்ப்பு வீசாவில் செல்வோருக்கு மட்டுமே பைஸர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

வீசா தொடர்பான உறுதிப்படுத்தல் ஆவணங்களை சுகாதார பிரிவினருக்கு வழங்கினால் கொழும்பில் தடுப்பூசி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply