நாட்டின் முக்கிய மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்!

களனிதிஸ்ஸ கூட்டு சுழற்சி மின் நிலையத்தில் நேற்று (02) இரவு மின் உற்பத்திப் பணிகள் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

165 மெகாவாட் மின்சாரத்தில் இயங்கி வரும் இந்த ஆலை, தேசிய மின் கட்டமைப்பிற்கு பாரிய பங்களிப்பை வழங்கி வரும் நிலையில், மின் உற்பத்திக்கு தேவையான நாப்தா கையிருப்பு இல்லாததால் நிறுத்தப்பட்டதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

எண்ணெய் நிறுவனத்திடம் 2000 மில்லியன் லீட்டர் இருந்தபோது நாப்தா வழங்கப்படாததால் இந்த ஆலை செயலிழந்தது என்றும் அந்த அதிகாரி கூறினார்.

மேலும், டீசல் ஆலைகளை விட நாப்தா ஆலைகள் ஒரு யுனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய குறைந்த செலவில் உள்ளது என்றார்.

Leave a Reply