கணவனை கொன்ற இலங்கை பெண்!பிரித்தானியாவில் அதிர்ச்சி

பிரித்தானியாவில் குடும்பத் தகராறு காரணமாக கணவனை கத்தியால் குத்தி இலங்கை தமிழ்ப்பெண் ஒருவர் கொலை செய்துள்ளார்.

பிரித்தானியாவில் நன்னிங்ரன் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து ஒரு ஆணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் வெளியாகியுள்ள தகவலின்படி, கடந்த 29ம் திகதி பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, குறித்த முகவரியில் அமைந்துள்ள வீட்டுக்கு வந்த பொலிஸாரால் ஒரு ஆணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இக்கொலையுடன் சந்தேகிக்கும் நபராக 34 வயதுடைய பெண் ஒருவரைக் கைது செய்துள்ளதாக வார்விக்‌ஷெயர் பொலிஸார் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இறந்தவர் இலங்கையைச் சேர்ந்தவர் எனவும் அவருடைய மனைவியான 34 வயதுடைய பெண்ணையே பொலிஸார் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரு குழந்தைகளுக்கு தந்தையான குறித்த நபரையே மனைவி கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

குடும்பத் தகராறே இக் கொலைக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply