அப்பாவின் வேட்டியால் 10 வயது சிறுவன் பாத்ரூமில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை ஐசிஎப் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சதீஷ். இவர் மனைவி ஜீவா. இத்தம்பதிக்கு கிருபா(13 ) என்ற மகளும், ரித்தீஷ்(10) என்ற மகனும் இருந்தனர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கணவனையும், பிள்ளைகளையும் விட்டு பிரிந்து சென்றுவிட்டார் ஜீவா.
ஆட்டோ ஓட்டுநனராக சதீஸ் தனது இரண்டு பிள்ளைகளையும் வீட்டில் விட்டு விட்டு ஆட்டோ ஓட்ட சென்றுள்ளார். அப்பொழுது அக்கா கிருபாவிடம் தான் பாத்ரூம் போவதாக கூறிவிட்டு ரித்தீஷ் சென்றுள்ளார்.
Advertisement
வெகு நேரம் ஆகியும் தம்பி வராததால் கிருபா கதவை தட்டிப்பார்த்துள்ளார். எந்தவொரு சத்தமும் வராததால் அருகில் இருப்பவர்களிடம் அழுதுகொண்டே சென்று விபரத்தினை கூறியுள்ளார்.
அண்டை வீட்டினர் வந்து கதவை உடைத்து பார்த்தபோது, குளியல் அறை ஜன்னலில் வேட்டியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
தகவல் அறிந்து வந்த சதீஷ், மகனின் உடலைப்பார்த்து கதறியுள்ளார். பின்னர் ஐசிஎப் போலீசார் வந்து ரித்தீஷ் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுவனின் தற்கொலைக்கான காரணத்தை அறிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.