கொரோனா பாதிக்கப்பட்ட எம்.பி.க்களின் எண்ணிக்கை நான்காக அதிகரிப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜனக திஸ்ஸ குட்டியாராச்சி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அடுத்து, ஹம்பாந்தோட்டை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி எம்.பியான திலிப் வெதஆராச்சிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், மாத்தளை மாவட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரான ரோஹண திஸாநாயக்கவுக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாரத்தில் மட்டும் நான்கு எம்.பிக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply