வடகிழக்கை கூறுபோட்டு வடக்கில் மட்டுமே இனப்பிரச்சனை உள்ளது-கிழக்கில் இல்லையென காட்ட முற்படும் சதியை முறியடிப்போம்!

சிங்கள பேரினவாத அரசாங்கம் தமிழர் தாயகத்தை கூறுபோட்டு வடக்கையும் கிழக்கையும் இரண்டாக பிரித்து, வடக்கில் மாத்திரமே இனப்பிரச்சனை உள்ளதாகவும் கிழக்கிலே அவ்வாறு எதுவும் இல்லை என்பதை காட்ட முற்படுகின்ற சதி நாடகத்திற்கு எதிராக அனைத்து மக்களும் இணைந்து அதனை முறியடிக்கவேண்டுமென அருட்தந்தை ஜெகதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

வடகிழக்கு இணைந்த தமிழர் தாயக பகுதியில் முன்னெடுக்கப்படுகின்ற  தமிழ் மக்களுக்கு எதிரான அனைத்து செயற்பாடுகளையும் கண்டித்தும் இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினம் தமிழர்களுக்கு கரிநாள் என்பதனை வலியுறுத்தியும் வடகிழக்கு இணைந்ததாக முன்னெடுக்கப்படவுள்ள கருப்பு சுதந்திர தின  எழுச்சிப் பேரணி ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

மாபெரும் மக்கள் எழுச்சியை சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டி அறப்போரிலே நம்பிக்கை வைத்து அகிம்சைவாதிகளாக தமிழ் மக்களின் உரிமைகளை வலிறுத்தி நிற்கிறோம் என்பதை சிங்கள தேசத்திற்கும் காட்டுவதற்கு நாளைய பேரணியில் அனைத்து தமிழ் மக்களும் கலந்து கொள்ளவேண்டுமென அருட்தந்தை ஜெகதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *