கொழும்பில் நாளை இடம்பெறவுள்ள போராட்டங்களுக்கு தடை!

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு காலிமுகத்திடல் பகுதியில் நாளை (04) எவ்வித எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதற்கு தடைவிதித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (3) உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, திட்டமிடப்பட்ட கொண்டாட்டங்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நாளை காலிமுகத்திடலுக்கும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் எந்தவொரு போராட்ட இயக்கமும் அல்லது எந்தவொரு நபரும் நுழைவதை தடுக்கும் வகையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply