உள்ளுராட்சிமன்ற தேர்தல் மார்ச் 9இல் நிச்சயம் நடக்கும் – அமைப்பாளர்களுக்கு பசில் ஆலோசனை.!

அடுத்த மாதம் 9ஆம் திகதி நிச்சயமாக உள்ளுராட்சிமன்ற தேர்தல் நடைபெறுமென பசில் ராஜபக்ச அறிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்ச, தமது கட்சியின் அனைத்து தொகுதி அமைப்பாளர்களுக்கும் இந்த அறிவித்தலை விடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே தேர்தலை எதிர்கொள்வதற்கு அனைவரையும் தயாராகுமாறு பசில் ராஜபக்ச ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் சனத் நிசாந்த குறிப்பிட்டிருந்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நடைபெற்றகலந்துரையாடலின் போதே இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சனத் நிசாந்த மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply