சித்தங்கேணியில் விபத்து: ஒருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தங்கேணி சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ். சித்தங்கேணி சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளும், கப் ரக வாகனமும் மோதியதில் விபத்துச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து, நோயாளர் காவு வண்டி மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply