சிறைச்சாலைகளில் இறுதியாகவுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலையாகும் வரையில் போராடவேண்டுமென வடக்கு கிழக்கு மக்கள் போராட்ட அமைப்பின் உறுப்பினர் ராஜ்குமார் ராஜீவ்காந்த் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு வலியுறுத்தியிருந்தார்.
அத்துடன் 30ற்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் மிக நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று வசந்த முதலிகேயின் விடுதலையை தொடர்ந்து பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் வரை தொடர்ந்து போராட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





