இராணுவ சீருடையுடன் மீட்கப்பட்ட மனித எச்சங்கள்: கிளி.யில் தொடர்ந்து அகழ்வு பணி முன்னெடுப்பு

கிளிநொச்சி- விளாவோடை வயல் பகுதியிலிருந்து இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதை தொடர்ந்து இன்றும் (வெள்ளிக்கிoமை) அப்பகுதியில் அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தடயவியல் பொலிஸாரும் இந்த விடயம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நேற்று, விளாவோடையிலுள்ள வயல் காணியை சீரமைக்கும்போது குறித்த எச்சங்களை அவதானித்த காணி உரிமையாளர், பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

அதன்பின்னர், கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிபதி லெனின்குமார் அப்பகுதியை சென்று பார்வையிட்டதுடன், மேலும் எச்சங்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அகழ்வு பணிகளை முன்னெடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை, நீதவான் முன்னிலையில் ஆரம்பமான குறித்த பணி, சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் டனுசன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது அடையாளம் காணப்பட்ட எச்சங்கள் பொதியிடப்பட்டதுடன் அகழ்வு பணிகள் நாளையும் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply