மின்வெட்டு கோரிக்கையை நிராகரித்தது உயர் நீதிமன்றம்!

க.பொ.த. உயர் தர பரீட்சை காலத்தில், இலங்கை மின்சார சபை மின்வெட்டு மேற்கொள்வதை தடுக்கும் வகையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிய இடைக்கால உத்தரவுக்கான கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

மின்சார சபை உள்ளிட்டோர் மீது மனித உரிமைகள் ஆணைக்குழு தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

குறித்த மனுவை எதிர்வரும் 7 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply