கொரோனாவில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க சிறப்பு பணிக்குழுக்கள் அமைப்பு!

கொரோனாவில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க சிறப்பு பணிக்குழுக்களை அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 13 பேர் கொண்ட பணிக்குழுவினை அமைக்கப்பட்டுள்ளதுடன், இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள், பாதிக்கப்படும் குழந்தைகளுக்கான சிகிச்சை முறைகள் குறித்த ஆலோசனைகளை இந்த குழு வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை குழந்தைகளை தாக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தமிழக அரசு இதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply