நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலைமை காரணமாக மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக பேராசிரியர் சுனேத் அகம்பொடி எச்சரித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் தினசரி 150 முதல் 200 மரணங்கள் ஏற்படக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
அவ்வாறான 200 உடல்களை ஒரே நேரத்தில் எரிக்கக்கூடிய ஒரு சுடுகாட்டை உருவாக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகவுள்ளோம்.
டெல்டா மாறுபாட்டிற்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்ட முடிவுகளே இந்த நிலைமைக்கு காரணமாகும் என தெரிவித்துள்ளார்.