திருமலையில் மின்சாரம் தாக்கி இளம் நபர் பலி

திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவது,

திருகோணமலை – அனுராதபுரம் சந்திப்பகுதியில் அமைந்துள்ள கட்டிமொன்றில் ஓவியம் வரைந்து கொண்டிருந்த நிலையில்,குறித்த நபர் மின்சார தாக்கத்திற்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.

மேலும், உயர் மின்னழுத்த மின்கம்பிக்கு அருகில் பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்ட கட்டிடமொன்றில், மேல் தளத்தில் வர்ணம் தீட்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட ஒருவரே இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தற்போது திருகோணமலை வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply