ரஞ்சன் ராமநாயக்கவுக்கு கொரோனா

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர், ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்காக அங்குணுகொலபெலெஸ்ஸ சிறைச்சாலையில் உள்ள நிலையிலேயே அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதேவேளை, அண்மையில் தமது உறவினர் ஒருவரின் மரணச் சடங்கில் கலந்துகொள்வதற்காக விசேட அனுமதியில் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்புடன் சென்றிருந்தார்.

அதன்போது, அரசியல் பிரமுகர்கள் சிலருடனும் அவர் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *