24 மணி நேரமும் சுடுகாடுகளை திறக்க தீர்மானம்

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் களுத்துறை மாவட்டத்திலுள்ள அனைத்து சுடுகாடுகளையும் 24 மணி நேரமும் திறந்து வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொவிட் தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் வைத்தியசாலைகளின் பிணவறைகள் நிரம்பி வழிகின்றன.

இதனால் களுத்துறை மாவட்டத்தில் 24 மணி நேரமும் அனைத்து சுடுகாடுகளும் செயற்பட முடிவெடுக்கப் பட்டுள்ளதாக களுத்துறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உதய ரத்நாயக்க தெரிவித்தார்.

களுத்துறை அரசாங்க அதிபர் பிரசன்ன கினிகேயுடனான கலந்துரையாடலின் பின் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply