75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண சபையின் இஸ்லாமிய நிகழ்வு!

கிழக்கு மாகாணசபையின் ஏற்பாட்டில் 75 வது சுதந்திர தின  நிகழ்வானது இஸ்லாமிய சமய விசேட துஆ பிரார்த்தனை மற்றும் வழிபாட்டு நிகழ்வுடன் நேற்று(02) அனுராதபுர சந்தி அல்ஹுலூர் ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்றது.

இதில் விசேட துஆ பிரார்த்தனையும் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் அநுராதா யகம்பத்,திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம ,மெளலவிமார்கள்,  கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர். எம். பி. எஸ். ரத்னாயக்க, கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், மத்ரசா மாணவர்கள், பிரதேசவாசிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply