யாழில் இருந்து நால்வர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்!

யாழ்ப்பாணத்தில்  இருந்து நேற்று இரவு நான்கு பேர் தமிழகம் இராமேஸ்வரத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.

மன்னாரில் படகு மூலம் சென்று நேற்று இரவு 10 மணியளவில் இவ்வாறு தஞ்சமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் நால்வரே இவ்வாறு தமிழகம் சென்றடைந்துள்ளனர்.

இவ்வாறு சென்றவர்களில் இரு பெண்கள், ஒரு ஆண் மற்றும் ஒரு சிறுவனும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply