யாழில் அரச அலுவலகங்களில் சுதந்திரதின நிகழ்வுகள்!

இலங்கையின் 75வது சுதந்திர தின நிகழ்வுகள் நாடளாவிய ரீதியிலுமுள்ள அரச அலுவலகங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களிலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் சற்றுமுன் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பிரதேச செயலகத்திலும் சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றது.

முன்னதாக இலங்கையின் தேசியக்கொடி ஏற்றப்பட்டு  நிகழ்வுகள் ஆரம்பமானது.

குறித்த நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

அதேவேளை யாழிலுள்ள பல அரச நிறுவனங்களில் தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டு சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *