கொழும்பில் கைதுசெய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை சட்டத்தரணிகள் பார்ப்பதற்கு அனுமதி மறுப்பு

மருதானையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவேளை நேற்று கைதுசெய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை சட்டத்தரணிகள் பார்ப்பதற்கு அனுமதிமறுக்கப்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறித்து அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டுள்ளவர்களை சட்டத்தரணிகள் பார்ப்பதற்கு அனுமதி மறுப்பது 2018 பலவந்தமாக காணாமல்போதல் தொடர்பான சட்டத்தை நேரடியாக மீறும் செயல் என சட்டத்தரணி சாலியபீரிஸ் தெரிவித்துள்ளார்.

சுதந்திரமும் விடுதலையும் மக்களிற்கானது அதிகாரத்தில் உள்ளவர்களிற்கானது இல்லை என சாலியபீரிஸ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply