மொட்டு கட்சி போன்று இனவாதம் பேசும் சிறுபான்மை கட்சிள்- இம்ரான் மகரூப் ஆதங்கம்!

தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தாலும் இன்றும் எல்லோரிடையேயும் தேர்தல் நடக்குமா? இல்லையா? என்ற சந்தேகம் காணப்படுகின்றது. குறிப்பாக வரலாற்றில் இம்முறை அதிக எண்ணிக்கையிலான வேட்புமணுக்கல் தாக்கல் செய்திருந்தாலும், தேர்தல் தினம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், வர்த்தமானி வெளியிடப்பட்ட போதிலும் உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்படவில்லை. அரசாங்கம் தேர்தலை முகங்கொடுப்பதற்கு தயாராக இல்லாத காரணத்தினால் அவர்கள் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களை அச்சுறுத்துகின்றமை மட்டுமல்லாமல் மக்களையும் அச்சுறுத்துவதாக கிண்ணியாவில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் விளக்கக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயளாளர் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்,
இந்த தேர்தலை சிலர் சிறிய தேர்தலாக கருதுகிறார்கள், இதனை சிறிய தேர்தலாக கருத முடியாது. 2018 ம் ஆண்டு அதிக உள்ளூராட்சி மன்றங்களை மொட்டு கைப்பற்றிய காரணத்தினால்தான் சென்ற ஐனாதிபதி தேர்தலில் அவர்களால் 69 இலட்சம் வாக்குகளை பெறமுடிந்தது என்பதை நாம் விளங்கிக்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
எமது சமூகம் விளிப்புடன் செயற்படவேண்டிய சந்தர்ப்பத்தில் இருந்துகொண்டிருக்கிறோம். தற்போதைய நிலைக்கு சிலர் கோட்டபாய ராஜபக்ஸ காரணம் என்று சொல்லிக்கொண்டு தங்கள் தவறை மறைக்கிறார்கள்.
69 இலட்சம் வாக்குகளை பெற்ற கோட்டபாய ராஜபக்ஸவுக்கு ஏற்பட்டநிலையை நாம் விளங்கவேண்டும். இனவாதத்தால் ஆட்சி பீட மேறியகாரண்தால் அவர்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை சிங்கள மக்கள் விளங்கியிருக்கிறார்கள். சிறந்த தலைவரை அடையாளம் காண்கிறார்கள்.  எமது முஸ்லிம் சமூகம் கண்டுகொள்ளாத சூழ்நிலை காணப்படுகிறது. எப்படி மொட்டு கட்சியை சேர்ந்த தலைவர்கள் இனவாதம் பேசினார்களோ அதே போன்று  சிறுபான்மை கட்சிகளும் தேர்தல் காலங்களில் இனவாதம் பேசுகின்றனர் என குறிப்பிட்டார்.
மேலும், 20 வது திருத்தத்திற்கு வாக்களித்தவர்களால் எமது முஸ்லிம் சமூகம் பட்ட இன்னல்களை எமது கண்முன்னெ விளங்கிக்கொண்டிருக்கின்றது, கோட்டபாய ராஜபக்ஸவிற்கு 2/3 பெரும்பான்மையை வழங்கியது எமது சில முஸ்லிம் உறுப்பினர்களே,  அவர்களே நாட்டின் எமது சமூகத்தின் இந்தநிலைக்கு காரணம்.  20 வது திருத்தத்திற்று வாங்களித்தவர்களுக்கு எந்ந நடவடிக்கையும் அவர்களது கட்சித்தலைவரால் எடுக்கப்படவில்லை. சிங்கள மக்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள் ஐனாதிபதி, பிரதமர், அமைச்சர்களை துரத்தியிருக்கின்றார்கள், நாமும் உணர்ந்து நடக்கவேண்டும் எனவும் அதற்கு இந்த உள்ளூராட்சி மன்றத்தேர்தலை முதலாவது படியாக பயன்படுத்தவேண்டும் எனவும் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
அதேபோன்று எதிர்க்கட்சி தலைவராக இருந்து திருகோணமலை மாவட்டத்திற்கு அவருடைய சுவாசம், பிரபஞ்சம் திட்டத்தினூடாக வழங்கிய மற்றும் குறுஞ்சாங்கேணி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கிய உதவிகளுக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அவர்களுக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *