கொழும்பில் வெடிகுண்டுத் தாக்குதல்-விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை; உண்மை நிலவரம் என்ன?

வெடிகுண்டுத்தாக்குதல் இடம்பெறப்போவதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பரப்பட்டு வருகின்றது.

அதாவது கொழும்பில் வெடிகுண்டுத்தாக்குதல் இடம்பெறப்போவதாக ஊடகங்கள் வாயிலாக போலி செய்திகள் பரப்ப்பட்டு வரும் செய்தி குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

“கொழும்பிலுள்ள இரண்டு முன்னணி ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும், பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, மிரிஹான, நுகேகொட, கல்கிசை மற்றும் தெஹிவளை ஆகிய இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் எச்சரிக்கை இருப்பதாகக் கூறப்படும் பதிவுகள் முற்றிலும் பொய்யானவை. மக்கள் பீதியடைய வேண்டாம்“ என்று பொலிசார் மக்களுக்கு தெளிவுபடுத்தினர்.

அத்தோடு இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவும் இந்த தகவல் போலியானது என்பதை உறுதி செய்தார்.

மேலும் 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பிறகு சமூக வலைதளங்களில் பரவிய ஒரு இடுகை மீண்டும் திருத்தப்பட்டு மீண்டும் பரப்பப்பட்டது என்று கூறப்படுகின்றது.

Leave a Reply