சுதந்திரதினத்தில் வவுனியாவில் பண்டார வன்னியனுக்கு மலர்மாலை அணிவிப்பு!

இலங்கையில் இன்று 75ஆவது சுதந்திரதினம் கடைப்பிடிக்கப்படுகின்றது.
இந்நிலையில் வவுனியா மாவட்ட செயலக வாயிலில் அமைந்துள்ள பண்டாரவன்னியன் நினைவுத் தூபிக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மலர்மாலை அணிவிக்கப்பட்டது. 

இந் நிகழ்வில் வவுனியா பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் பிரியதர்ஷினி சஜீவன் மற்றும் கிராம அலுவலர்கள், வவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு மலர்மாலை அணிவித்தனர்.

Leave a Reply