கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் இடங்கள் தொடர்பான அறிவிப்பு

கொழும்பு- விஹாரமஹாதேவி பூங்காவில் 24 மணிநேரம் இடம்பெறும் கொரோனா தடுப்பூசி வழங்கும்  நடவடிக்கை, இன்றும் (சனிக்கிழமை) இடம்பெறவுள்ளது.

இதில் அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை இதற்கு முன்னர் பெற்றுக்கொண்டவர்கள் யாராக இருந்தாலும் , அந்த இடத்திற்கு சென்று 2ஆவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான சைனோபாம் முதலாம் தடுப்பூசி பனாகொட – போதிராஜாராமய மற்றும் நாரம்பிட்டி இராணுவ வைத்தியசாலை ஆகியவற்றில் இன்று முதல் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்  பொதுமக்கள் தங்களுக்கான தடுப்பூசியை தமது வசிப்பிடங்களுக்கு அருகிலுள்ள நிலையங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும்.

Leave a Reply