சுதந்திர தினத்தில் டி.எஸ்.சேனாநாயக்கவின் உருவச்சிலைக்கு மாலை அணிவிப்பு!

இலங்கையின் 75வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் சுதந்திர தினத்தில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அமைந்துள்ள டி.எஸ்.சேனாநாயக்கவின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு முன்னாள் சபாநாயகர் கருஜயசூரியவின் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் விஜயதாஸ ராஜபக்ச உள்ளிட்ட அரச தரப்பினர் கலந்துகொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply