பட்டப்பகலில் கடத்தல் : நாடாளுமன்றில் வீரசேகரவுடன் சுமந்திரன் வாய்தர்க்கம்

நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட பல கேள்விகளுக்கு பதிலளிக்காத பொது பாதுகாப்பு அமைச்சரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கடுமையாக சாடியிருந்தார்.

சிவில் உடையில் மேற்கொள்ளப்பட்ட கடத்தல்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கடுமையான கவலைகளை எழுப்பினார்.

இது ஒரு தீவிரமான பிரச்சினை என சுட்டிக்காட்டிய சுமந்திரன் இது நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலைமையை முழுமையாக சிதைப்பதை காட்டுகிறது என்றும் கூறினார்.

இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெறும்போது எதற்கு அமைச்சர் என ஒருவர் இருக்கின்றார் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

மூத்த விரிவுரையாளர்கள், மாணவர் ஒன்றியத் தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பலர் பட்டப்பகலில் கடத்தப்படுவதை எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

மேலும் இவ்வாறான கடத்தல் சம்பவங்கள் மூலம் மீண்டும் வெள்ளை வேன் கலாச்சாரத்தை நினைவுபடுத்துகிறீர்களா என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

இருப்பினும் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, சுமந்திரன் எந்த ஆதாரமும் இல்லாமல் கருத்தை வெளியிடுவதாக கூறியதை அடுத்து இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் இடம்பெற்றது.

Leave a Reply