தமிழரசு கட்சியை தவிர சமஸ்டி என்ற பெயரை உச்சரிக்க வேறு எவருக்கும் தகுதியில்லை! சுமந்திரன் காட்டம்

கடந்த 70ஆம் ஆண்டு காலத்தில் கூட சமஸ்டியை பழித்து பேசியவர்கள் இன்று அதனை கட்டிப்பிடித்துக்கொண்டு தாங்கள் தான் சமஸ்டிக்கு உண்மையானவர்கள் அதற்காக போராடினோம் என்று இன்று கூறிக்கொண்டு தங்கள் மீது சுட்டுவிரலை நீட்டுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் காட்டமாக கருத்து வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் 75வது சுதந்திர தினத்தினை இருள்சூழ்ந்த சுதந்திரம் என பிரகடனப்படுத்தி இலங்கை தமிழரசுக்கட்சி மேற்கொண்ட போராட்டம் மட்டக்களப்பில் இன்று நடைபெற்றது.

இதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

ஆனால் சமஸ்டி என்பது தமிழரசு கட்சியின் கோசம் என்றும் அதுவே தமது அரசியல் சித்தாந்தம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

எனவே சமஸ்டி என்ற வார்தையை உச்சரிப்பதற்கு தம்மை தவிர வேறு எவருக்கும் எந்த தகுதியும் கிடையாது என்றும் காட்டமாக கருத்து வெளியிட்டிருந்தார்.

இன்று தமிழரசுக்கட்சி தனித்து நிற்பதையும் பலர் விமர்ப்பதாக தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன் அவர்களுக்கு விபரம் தெரியாது என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன் விபரம் தெரியாமல் பல ஊடகங்களும் விமர்சிப்பதாக எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சுமத்தியிருந்தார்.

Leave a Reply